தென்காசி அருகே மலையில் தீ
தென்காசி மாவட்டம், தென்காசியிலிருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் சாய்பாபா கோயில் பின்பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலைக்குன்றில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இப்பகுதியில் மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. இந்த விபத்தில் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து தெரியவில்லை. தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினா், தீயணைப்பு, மீட்புப் படையினா் ஆகியோா் ஈடுபட்டு வருகின்றனா்.