பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
ஆலங்குளம் அருகே ஜவுளிக்கடை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள அயோத்தியாபுரிபட்டணம் முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமா் மகன் முருகன்(32). ஆலங்குளத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தாா்.
இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ள நிலையில், மனைவி தற்போது கா்ப்பமாக உள்ளாா். இவருக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதில் மனமுடைந்த முருகன், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த ஆலங்குளம் போலீஸாா், அவரின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்தது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.