``என் ரசிகர் மன்றத்தில் இருந்தால் பெண் கொடுக்க போட்டி போடுவார்கள்'' - ராமராஜன் சொல்லும் காரணம்
ராமராஜன் தலைமை நற்பணி மன்றம்
திரைப்பட நடிகரும் முன்னாள் அதிமுக திருச்செந்தூர் மக்களவை உறுப்பினருமான ராமராஜன், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ராமராஜன் தலைமை நற்பணி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத்தைப் பொறுத்தவரை, மற்ற நடிகர்களுக்கான நற்பணி மன்றங்களைப் போல அல்லாமல், இங்கு மிகவும் கட்டுப்பாடுடன் செயல்பட்டு வருகிறது.

உறுப்பினர் சேர்க்கை கட்டணம்
இங்குள்ள தனது நற்பணி மன்றத்தில் தற்போது உறுப்பினராக சேர விரும்பினால், 60 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.
அதற்குப் பிறகு, பணம் கட்டியவர்கள் ஒழுக்கம் குறித்த விசாரணை செய்யப்பட்டு, அதன் பின்னர் நற்பணி மன்ற தலைவர் தாமரைக்கனி அவர்களின் ஆலோசனையின் பேரில் மன்றத்தில் இணைக்கப்படுவர்.
தற்போது உறுப்பினர் சேர்க்கை கட்டணம் 60 ஆயிரம் ரூபாயாக உள்ளது. வரும் அக்டோபர் 8 முதல் அது 70 ஆயிரம் ரூபாயாக மாற்றப்பட உள்ளது.
மேலும், இந்த ஊரைப் பொறுத்தவரை, ராமராஜன் நற்பணி மன்றத்தில் ஒருவர் ரசிகராக இருந்தாலே, பெண்களை போட்டி மூலம் வரவழைக்கும் நடவடிக்கைகள் நடைபெறும் என்று கூறினார்.
எம்.ஜி.ஆரின் புகழ்
தற்போதைய தமிழக அரசியல் களம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்த அவர், “நான் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் தலைமை ஏற்று, அ.தி.மு.க.-வில் சிறப்பாக செயல்பட்டு வந்தேன்” என தெரிவித்துள்ளார்.

“தற்போது நடைபெறும் சூழ்நிலைகள் எல்லாம், வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பே மாற வாய்ப்புள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டு நீக்கியது குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர்,
“இதில் எனக்கு உடன்பாடு இல்லை. இவை அனைத்தும் எம்.ஜி.ஆரின் புகழை கெடுக்குமெனில், அதனைத் தான் உயிரைக் கொடுத்து காப்பாற்றுவேன்” என்றார்.