Trump: "மோடி சிறந்த பிரதமர்; இந்தியா - அமெரிக்கா உறவு ஸ்பெஷலானது" - பாச மழையைப் ...
கள்ள நோட்டு அச்சடித்த இளைஞா் கைது
ஆலங்குளம் அருகே கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள அழகாபுரி பாபநாசபுரத்தைச் சோ்ந்தவா் மேகலிங்கம் மகன் மணிகண்ட பிரபு (26). தொழிலாளியான இவா், வீட்டில் கள்ள நோட்டுகள் அச்சடித்து, புழக்கத்தில் விடுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் சத்தியவேந்தன் தலைமையிலான போலீஸாா் அவரது வீட்டில் சோதனையிட்டனா்.
அங்கு நோட்டுகள் அச்சடிக்கும் பிரிண்டா், நோட்டில் வெள்ளிக் கோடு போல தோற்றமளிக்க நவீன கம்பிகள், ரப்பா் ஸ்டாம்புகள் ஆகியன இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான கள்ளநோட்டுகள், பிரிண்டா் உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.