பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
பள்ளி, மருத்துவமனைகளை விட மசூதிகள் அதிகம்! எங்கு தெரியுமா?
பாகிஸ்தான் நாட்டில் பள்ளி மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை விட மசூதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக பொருளாதாரக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
அதாவது, பள்ளிகளின் எண்ணிக்கையை விட மசூதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக உள்ளதாகவும், மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் இல்லை எனவும் தரவுகள் கூறுகின்றன.
1947ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் கிடைத்த தரவுகளின்படி,
பாகிஸ்தானில் மொத்தம் 6 லட்சம் மசூதிகள் மற்றும் 36 ஆயிரம் மதபோதனைக் கூடங்கள் உள்ளன. எனினும், 2,69,000 பள்ளிகள் மற்றும் 1,19,000 மருத்துவமனைகள் மட்டுமே உள்ளன. 250 மில்லியன் (25 கோடி) மக்கள்தொகை கொண்ட நாட்டில், இந்த எண்ணிக்கையிலான மருத்துவமனை போதுமானதில்லை எனக் கூறப்படுகிறது.
கல்வி பெறுவதில் உள்ள தலையீடு, மருத்துவ சேவைகளைப் பெறுவதில் உள்ள சிக்கல் போன்றவை நிர்வாகத்தில் உள்ள சமநிலையற்ற தன்மையையும் நிர்வாகப் பிரச்னைகளையும் எதிரொலிக்கின்றன. இவை நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன.
உயர்கல்வி பெறுவதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. புள்ளிவிவரக் கணக்கெடுப்பின்படி, 11,568 கல்லூரிகள், 214 பல்கலைக் கழகங்கள் மட்டுமே உள்ளன. இவை மனிதவள மேம்பாட்டிற்கான மோசமான நிலையக் குறிக்கிறது.
மேலும், பாகிஸ்தானில் தற்போதுள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கை 2,083 மக்களுக்கு ஒரு மருத்துவமனை என்ற விகிதத்திலேயே உள்ளன.
பாகிஸ்தானில் உள்ள மக்களுக்கு முறையான வேலைவாய்ப்பும் உருவாக்கப்படவில்லை. புள்ளிவிரவங்களின்படி, 10.9 மில்லியன் (1.9 கோடி) மக்கள் கால்நடை வளர்ப்பு, தையல் கலை, உணவு பதப்படுத்துதல், ஆன்லைன் சேவை போன்றவற்றை செய்து வருகின்றனர்.
இதில், 5.6 மில்லியன் மக்கள் கால்நடை வளர்ப்பு, 419,000 பேர் தையல் கலை, 93,000 பேர் ஆன்லைன் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது முறையான வேலைவாய்ப்பின்மையையே குறிக்கும் வகையில் உள்ளது.
கணக்கெடுப்பின்படி, 25 மில்லியன் (2.5 கோடி) மக்கள் 7.143 மில்லியன் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதில், 2,50,000 மட்டுமே பாகிஸ்தான் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவையாக உள்ளன.
இதையும் படிக்க |நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!