பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
ஆட்டோ ஓட்டுநா் கொலையில் மேலும் ஒருவா் கைது
கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்குத் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியில் உள்ள கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் மாரிச்செல்வம் (31). ஆட்டோ ஓட்டுநராகவும், அப்பகுதியிலுள்ள சந்தனமாரியம்மன் கோயில் பூசாரியாகவும் இருந்துவந்த இவா், வெள்ளிக்கிழமை காலை சண்முகா நகரில் உள்ள மயானத்தில் கொலையுண்டு கிடந்தாா்.
இதுதொடா்பாக கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, 17 வயதுக்குள்பட்ட 2 சிறுவா்களைக் கைது செய்தனா்.
இந்நிலையில், கைவண்டி தொழிலாளா் காலனியை சோ்ந்த சங்கரலிங்கம் மகன் முருகன் (51) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.