செய்திகள் :

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முதல் செப்.12-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

பலத்த மழை எச்சரிக்கை: இதில், ஞாயிற்றுக்கிழமை (செப்.7) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், திங்கள்கிழமை (செப்.8) ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை ஆகிய மாவட்டங்களிலும், செப்.9-இல் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிபேட்டை, வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய குமரிக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முதல் செப்.9-ஆம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீண்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணம் செப்.17-இல் தொடக்கம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தனது 5-ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை செப்.17-ஆம் தேதி தொடங்கவுள்ளாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் ப... மேலும் பார்க்க

அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து சத்யாபாமா நீக்கம்! இபிஎஸ் அதிரடி!

அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சுக்கு சத்தியபாமா ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அவரைக் கட்சி பொறுப்புகளில் இரு... மேலும் பார்க்க

எனக்குப் பின்னால் அண்ணாமலை இருக்கிறாரா? டிடிவி தினகரன் விளக்கம்!

எனக்குப் பின்னால் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்ற கேள்விக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மமுக பொதுச் செயலாளர் டிடி... மேலும் பார்க்க

அதிமுகவில் பதவியை ராஜிநாமா செய்கிறேன்: முன்னாள் எம்.பி. சத்தியபாமா

பதவிப் பறிப்பு எதிரொலியாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 1,000 பேர் ராஜிநாமா செய்துள்ளனர். மேலும், அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமாவும் தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகத் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலிருந்து நீக்கி... மேலும் பார்க்க

மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி மூடல்!

மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி ஞாயிற்றுக்கிழமை(இன்று) மூடப்பட்டது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் கடந்த 5 ஆம் தேதி உபரிநீர் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கி வழியாக... மேலும் பார்க்க