நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புகார்: காவல்துறையின் வலையில் நடிகை சிக்கியது எப்படி?
வங்காள திரைப்படம், தொலைக்காட்சி தொடர், விளம்பரங்கள் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றவர் நடிகை அனுஷ்கா தாஸ். இவரின் இயற்பெயர் மூன் தாஸ்.
2007-ம் ஆண்டு இவரின் காதலர் அவினாஷ் பூபன் பட்னாயக் மும்பையின் அந்தேரியில் உள்ள அனுஷ்கா தாஸின் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் புகுந்து, அனுஷ்கா தாஸின் தாயாரையும், மாமாவையும் சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு அனுஷ்கா தாஸின் வாழ்க்கை சூன்யமானது. அதற்குப் பிறகும் 23 வயதில் தன்னுடைய உழைப்பால் மாடலிங் துறையில் புகுந்து நடிகையாக தன்னை வளர்த்துக்கொண்டார். இந்த நிலையில்தான் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைதுப் பின்னணி என்ன?
மீரா பயந்தர்-வசாய் விரார் (MBVV) குற்றப்பிரிவு காவல்துறைக்கு திரைத்துறையில் வெற்றிப்பெறப் போராடிக்கொண்டிருக்கும் நடிகைகளை மூளைச் சலவைச் செய்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில் காவல்துறை விசாரித்ததில் அனுஷ்கா தாஸ் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து காவல்துறை தரப்பில், ``அனுஷ்கா தாஸ் என அடையாளம் காணப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர் பல மாதங்களாக இந்தச் செயலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
செல்போனில் ஆண் வாடிக்கையாளர்களிடம் பேசி, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இடங்களில் சந்திப்புகளை ஏற்பாடு செய்திருக்கிறார்.
அந்த இடங்களில், அறிமுக நடிகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, பணம் பெற்றிருக்கிறார்.
கடந்த வியாழன்று போலி வாடிக்கையாளரைப் பயன்படுத்தி அனுஷ்கா தாஸை கையும் களவுமாக பிடித்தோம்.
அவர் மீது பாரதிய நியாய சம்ஹிதா 2023-ன் பிரிவு 143(3) (நபர் கடத்தல்) 1956-ன் பிரிவுகள் 4 மற்றும் 5 கீழ் FIR பதிவு செய்திருக்கிறோம்." என்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...