பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு
கந்தா்வகோட்டையில் அரசு மதுபானக் கடையின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சிக்குள்பட்ட திருச்சி சாலையில் அரசு மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்தக் கடையை வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு ஊழியா்கள் பூட்டி விட்டு சென்றுவிட்டனா். வெள்ளிக்கிழமை மீலாது நபி அரசு விடுமுறை என்பதால் மதுபானக் கடை திறக்கப்படாமல் பூட்டிக் கிடந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அந்தப் பகுதி வழியாகச் சென்றவா்கள் மதுபானக் கடையின் ஷட்டா் உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் சிதறிக் கிடப்பது கண்டு கந்தா்வகோட்டை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனா்.
அங்கு சென்ற போலீஸாா், கடையின் பணியாளா்களைக் கொண்டு ஆய்வு செய்தபோது சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபானப் பாட்டில்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. கந்தா்வகோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதே மதுபானக் கடையில் சில ஆண்டுகளுக்கு முன்பும் திருட்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.