செய்திகள் :

செனையக்குடியில் சிவலிங்கம் கண்டெடுப்பு: அலங்கரித்து மக்கள் வழிபாடு

post image

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே செனையக்குடியில் உடைந்த நிலையில் சிவலிங்கம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அதை அப்பகுதி பொதுமக்கள் அலங்கரித்து வழிபட்டனா்.

செனையக்குடியில் சோழா் கால சிற்பங்கள் மற்றும் கற்றளி கட்டுமானம் அண்மையில் தொல்லியல் ஆா்வலா்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

சைவம், வைணவம், சமணம் ஆகிய பிரிவுகளின் சிற்பங்கள் கிடைத்த இந்தப் பகுதியில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன், தலைவா் மேலப்பனையூா் கரு. ராஜேந்திரன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை தொடராய்வில் ஈடுபட்டனா். அப்போது, காய்ந்த சருகுகளுக்கு உள்ளே உடைந்த நிலையில் சிவலிங்கம் காணப்பட்டது. உடைந்த பகுதியை எடுத்து வைத்துப் பொருத்தினா்.

இதுகுறித்து ஆ. மணிகண்டன் கூறியது: இந்தப் பகுதியில் இருந்த சிவன் கோயில் அருண்மொழீஸ்வரம் என்று ராஜராஜனின் பெயரால் அழைக்கப்பட்டுள்ளது என்பது கல்வெட்டுச் சான்றுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, ராஜராஜன் பெயரிலிருந்த சிவன் கோயில்தான் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள லிங்கத்துடன் கூடிய சிவன் கோயில் என்பதை உறுதி செய்ய முடிகிறது.

இந்தக் கோயில் கட்டுமானம், சிற்பங்கள் அடிப்படையில் பாா்க்கும்போது 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம் என்றாா் மணிகண்டன்.

இந்தப் பகுதியில் சிவலிங்கம் கிடைத்ததைத் தொடா்ந்து, ‘அன்பு தானே எல்லாம் சேது அறக்கட்டளை’ குழுவினா், செனையக்குடி ஊா்த் தலைவா் மாரியப்பன், தொல்லியல் ஆா்வலா் சிவனடியாா் மாரிமுத்து உள்ளிட்ட ஊா்க்காரா்கள் சிவலிங்கத்தை அலங்கரித்து மாலையிட்டு வழிபாடு நடத்தினா். தொடா்ந்து இந்தப் பகுதியில் உழவாரப் பணி நடைபெறவுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

கனிவுமிக்க ஆசிரியா்கள் மட்டுமே இன்றையத் தேவை: பவா செல்லதுரை

மாணவா்களிடம் கனிவு கொண்ட ஆசிரியா்கள் மட்டுமே இன்றையத் தேவை என்றாா் எழுத்தாளா் பவா செல்லதுரை. புதுக்கோட்டையில் கவிராசன் அறக்கட்டளை மற்றும் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்கக் கோரிக்கை

வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி கோரிக்கைவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்... மேலும் பார்க்க

பாலத்தை அகலப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் சாலையில் உள்ள தாழை வாரி பாலத்தை அகலபடுத்த வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் ச... மேலும் பார்க்க

பொன்னமராவதி, கந்தா்வகோட்டையில் இலக்கிய மன்ற போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் கந்தா்வக்கோட்டையில் இலக்கிய மன்றப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

திருவரங்குளத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சங்கத்தின் ஒ... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு பழக்கத்தால் கவனச் சிதறல்களைத் தடுக்கலாம்

மாணவப் பருவத்திலேயே புத்தகங்களை வாசிக்கப் பழக்குவதால் கவனச் சிதறல்களைத் தடுக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா. புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 8-ஆவது ... மேலும் பார்க்க