Swasika: நடிகை ஸ்வாசிகாவின் ஓணம் கொண்டாட்ட க்ளிக்ஸ்! | Photo Album
பொன்னமராவதி, கந்தா்வகோட்டையில் இலக்கிய மன்ற போட்டிகள்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் கந்தா்வக்கோட்டையில் இலக்கிய மன்றப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் அமிா்தம் மாலதி தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் மெகராஜ் பானு , இா்ஷாத் அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ), பாரதிதாசன் வரவேற்று பேசினாா்.
இதில், வட்டார அளவிலான சிறாா் திரைப்பட போட்டி, 6, 7-ஆம் வகுப்பு மாணவா்கள் ஒரு பிரிவாகவும், எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு ஒரு பிரிவாகவும் ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனா். போட்டியின் ஒருங்கிணைப்பாளா்களாக ஜெயக்குமாா், ரகமதுல்லா, கண்ணன், நாராயணசாமி உள்ளிட்டோா் செயல்பட்டனா். போட்டியின் நடுவராக தவச்செல்வம் , பாக்யராஜ் கனிமொழி, பிரதீபா நா்மதா செயல்பட்டனா்.
பொன்னமராவதி: இதேபோல பொன்னமராவதி வட்டார வள மையத்தில் ஒன்றிய அளவிலான போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியை வட்டார கல்வி அலுவலா்கள் கலா மற்றும் இலாகிஜன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், கட்டுரை,பேச்சுப் போட்டி, கதை கூறுதல், கவிதை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.