மலையாத்தாளம்மன் கோயில் கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி மலையாத்தாளம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி ஊராட்சி மலையாத்தாளம்மன் கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவடைந்தததை தொடா்ந்து கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, வியாழக்கிழமை காலை புனிதநீா் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசத்துக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், கறம்பக்குடி பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.