தேனியில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகை! ‘ஒன்றிணைய வேண்டும்’ என பெண்கள் முழக்...
திருவரங்குளத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சங்கத்தின் ஒன்றியத் தலைவா் சி.பழனிவேலு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நூறு நாள் வேலைத்திட்டத்தில் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.
தினக்கூலி ரூ.336-யை குறைக்காமல் வழங்க வேண்டும். திட்டப் பணியாளா்களுக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
இதில், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினரும் சங்கத்தின் மாநிலத் தலைவருமான எம்.சின்னதுரை பேசினாா். சங்கத்தின் மாவட்டச்செயலா் டி.சலோமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.