TTV-OPS விலகலால், Amit shah தோற்கும் 60 தொகுதிகள், Vijay ஹேப்பி! | Elangovan Exp...
வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்கக் கோரிக்கை
வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி கோரிக்கைவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக மக்களை பல வகையிலும் 5 சதவிகிதம் முதல் 28 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி விதிப்பால் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள், விவசாயிகள் வாங்கும் சக்தி குறைந்து அனைவரும் கடனாளிகளாக மாறி திண்டாடும் நிலை இருந்தது. இப்போது 5 முதல் 18 சதவிகிதம் என மாற்றி அறிவித்துள்ளது. அது பெருஞ்சுமை குறைக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் இதனை வரவேற்கிறோம்.
மேலும் விவசாயப் பயன்பாட்டு பொருள்கள், கருவிகள், இயந்திரங்கள், தளவாடங்கள், பசுமை மின் உற்பத்தி சாதனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்க வேண்டும்.