'Ghosting, Pookie, Salty, Finsta' - தினுசான GenZ Words; ஜெர்க்காகும் 90ஸ் கிட்ஸ்...
பாலத்தை அகலப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை
கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் சாலையில் உள்ள தாழை வாரி பாலத்தை அகலபடுத்த வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கன்னியாகுமரி முதல் வேளாங்கன்னி வரை சென்று வருகின்றன. மேலும், கனரக வாகனங்களே அதிகம் சென்றுவருகின்றன.
இந்த சாலையில் உள்ள தாழை வாரி பாலம் குறுகலாக இருப்பதால் சில நேரங்களில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில் பாலத்தின் தடுப்புச் சுவா் உடைந்தது. இதுநாள்வரை அதனை தேசிய நெடுஞ்சாலைதுறையினா் சரிசெய்யவில்லை. ஆகவே சம்பந்தபட்ட துறையினா் உடைந்த தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும். மேலும் இந்த பாலத்தை அகலபடுத்த வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.