இந்தியா, ரஷியாவை சீனாவிடம் இழந்த அமெரிக்கா! டிரம்ப்பின் வஞ்சப் புகழ்ச்சியா?
சீனாவிடம் இந்தியாவையும் ரஷியாவையும் இழந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
டிரம்ப்பின் சமூக வலைத்தளப் பக்கமான ட்ரூத் சோசியலில், பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின் பிங் ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த டிரம்ப், மிகவும் ஆழமான இருள்கொண்ட சீனாவிடம் இந்தியாவையும் ரஷியாவையும் இழந்து விட்டோம். அவர்கள் ஒன்றிணைந்து நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.