அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு! - ஓ.பன்னீர்செல்வம்
மாராயப்பட்டி திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்துள்ள மாராயப்பட்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இக்கோயிலில் சுமாா் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற
கும்பாபிஷேக விழாவுக்காக கோயில் வளாகத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் முதல் கால பூஜை தொடங்கி பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை வைத்து பூஜைகள் ஹோமங்கள் நடைபெற்றது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜை நிறைவடைந்து புனித நீா் கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து ராஜகோபுர கலசத்துக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியாா்கள் நடத்தி வைத்தனா்.
அதன்பிறகு பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிறகு ட்ரோன் மூலம் பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.