`StartUp' சாகசம் 39: "Excavators பெரிதாகத்தான் இருக்க வேண்டுமா?" - மாற்று யோசனைய...
ஆக்ஸ்போர்டில் உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா? - ஜி.யு. போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின்!
ஆக்ஸ்போர்டில் ஜி.யு. போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்றார்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பெரியார் உருவப் படத் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.
பின்னர், அதனைத் தொடர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டிற்கு வந்து, தமிழ் மொழி கற்று தமிழுக்கு தொண்டாற்றிய ஜியு. போப்பின் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஜி.யு.போப்! 19 வயதில் தமிழ்நாட்டிற்கு வந்தார்! தமிழ் மேல் தீராக் காதல் கொண்டார்! தமிழ்ச்சுவையை உலகறியத் திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார்!
ஆக்ஸ்போர்ட் அறிவாலயத்தில் பேராசிரியராகத் தமிழ்த் தொண்டாற்றினார்! ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா? அங்குள்ள ஜி.யு.போப்பின் கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்” எனப் பதிவிட்டுள்ளார்.