3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்ற...
GRT: குழந்தைகளுக்கான நம்பிக்கையின் பாதையைப் பிரகாசமாக்கும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!
வாஷினி இல்லம் அறக்கட்டளையின் நடமாடும் குழந்தை சிகிச்சை சேவைக்காக ரூ.58 லட்சம் நிதி உதவியை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தாராளமாக வழங்கியுள்ளது.
இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லாஸ் வணிகத்தைத் தாண்டி மக்கள் மனதில் மதிப்பை உருவாக்குவதே உண்மையான வெற்றி என்பதை நம்புகிறது. இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக சமூக பொறுப்பை அடிப்படைக் குறிக்கோளாக ஏற்று வாழ்க்கையை மேம்படுத்தவும் சமூகங்களை மேம்படுத்தவும் அதன் செழிப்பை விரிவுபடுத்துகிறது.
இச்செயலுக்கான ஆழமான ஈடுபாடு ஜிஆர்டியின பயணத்தின் கருப்பொருளாகத் தொடர்கிறது. இது கருணையுடனும் நேர்மையுடனும் சமூக சேவையில் நிலையான முயற்சிகளால் வெளிப்படுகிறது.

இந்தக் கண்ணோட்டத்திற்கு இணங்க, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் சென்னை, அண்ணாநகரில் அமைந்துள்ள வர்ஷிணி இல்லம் அறக்கட்டளைக்கு ரூ. 58,24,758 நிதி உதவியால் தனது ஆதரவை வழங்கியுள்ளது இந்த முயற்சியால் மொபைல் பீடியாட்ரிக் சிகிச்சை சேவைகள் வாயிலாக - இந்த அறக்கட்டளை சமூகத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு அவர்களுக்கான முக்கிய பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு ஆதரவுகளை எளிதாக வழங்க உதவும்.
இந்த முயற்சி குறித்துப் பேசிய ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர் ஆனந்த அனந்தபதமநாபன் அவர்கள் கூறியதாவது, ஜிஆர்டியில் எங்கள் பொறுப்பு வணிகத்திற்கு அப்பாற்பட்டது என்பதை நாங்கள் எப்போதும் நம்புகிறோம்.
ஒவ்வொரு குழந்தையும் அக்கறையுடனும் கண்ணியத்துடனும் வளர வாய்ப்பு பெற தகுதியானது, மேலும் இதைச் சாத்தியப்படுத்த வாஷிணி இல்லம் அறக்கட்டளைக்கு ஆதரவு வழங்குவதில் நாங்கள் மிகுந்த பெருமையை உணர்கிறோம் எங்களைப் பொறுத்தவரை உண்மையான மரபு என்பது வெறும் நகைகளில் மட்டுமல்ல எங்கள் நிறுவனமாக எதிர்கால சந்ததியினருக்காக உருவாகக் உதவும் நம்பிக்கையிலும் வாயப்புகளிலும் உள்ளது"
மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் மற்றொரு நிர்வாக இயக்குனர் திரு.ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில் "ஜிஆரடியில் எங்கள் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமூகப் பிரசாரஙகளுக்கு ஆதரவு வழங்குவதில் எடுத்து செல்லும் ஒவ்வொரு அடியும், அந்த நம்பிக்கையைத் திருப்பி வழங்கும் எங்கள் வழியாகும். வாஷிணி இல்லம் அறக்கட்டளைக்கு எங்கள் உதவி ஒரு நிறுவனம் அவர்கள் சேவை புரியும் சமூகங்களுடன் இணைந்து வளரும்போது, அவை வலுவாக வளரும் என்ற எங்கள் பெரிய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி நகைகள் கைவினை திறன் வடிவமைப்பு சிறப்பம்சம் மற்றும் காலத்தால் அழியாத மதிப்புகளுக்காகப் போற்றப்படும் இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. தங்கம், வைரம், பிளாடினம், வெள்ளி மற்றும் ரதின கற்கள் போன்ற அழகிய கலெக்ஷன்களை வழங்கி வருகிறது.
இந்நிறுவனம் தலைமுறை தோறும் நம்பிக்கையின் மரபை காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தென் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 66க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ். தான சேவை செய்யும் சமூகங்களுக்கான அதன் நீடித்த அர்ப்பணிப்பை நிலைநிறுத்தி. கலைத்திறனை நம்பகத்தன்மையுடன் தொடர்ந்து வெளிப்படுத்துகிறது.