`StartUp' சாகசம் 39: "Excavators பெரிதாகத்தான் இருக்க வேண்டுமா?" - மாற்று யோசனைய...
உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை! பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் ரஷியா!
உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷியா தொடர்ந்து தட்டிக் கழித்து வந்த நிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, உக்ரைன் பிரதிநிதிகளுக்கு முழு பாதுகாப்பு உத்தரவாதங்களையும் அளிக்க முன்வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
குறிப்பாக, அமைதிக்கான நோபல் விருதை பெற விரும்பும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தொடர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும், போர்நிறுத்த பேச்சுவார்த்தையை புதின் தொடர்ந்து தட்டிக் கழித்து வந்தார்.
போருக்குப் பிறகு, உக்ரைனுக்கு நிலம், கடல் மற்றும் வான்வழியில் ஒரு சர்வதேச படையின் மூலம் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க 26 நாடுகள் உறுதியளித்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மேக்ரான் புதன்கிழமையில் கூறிய நிலையில், தற்போது புதினின் அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.