2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!
ஏர்போர்ட் மூர்த்தி மீது நடந்த தாக்குதல்; "இதுதான் திராவிட மாடலா?"- நயினார் நாகேந்திரன் கண்டனம்
சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலக வாயிலில், புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏர்போர்ட் மூர்த்தி, விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வந்ததாகவும், அதனால் தான் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்களும் 'தலைவர் திருமாவளவன் வாழ்க' என்று கத்தியபடி மூர்த்தியைத் தாக்கியதால் இச்சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.

அரசியல் கட்சித் தலைவரை பொதுவெளியில், அதுவும் சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு இந்தத் தாக்குதல் நடந்துள்ளதைப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்தே புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது விசிகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. தலைநகர் சென்னையில், காவல்துறை அலுவலகத்தில் வைத்தே, ஒரு கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு யார் துணிச்சல் அளித்தது?
நேற்று ஒரு பேரூராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சி நிர்வாகி ஒருரைக் கொலை செய்ய முயற்சித்த நிலையில், இன்று காவல்துறை அலுவலகத்தில் மற்றொரு கட்சித் தலைவரைத் தாக்கியிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏட்டளவில் கூட இல்லை என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா?
— Nainar Nagenthiran (@NainarBJP) September 6, 2025
சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்தே புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது விசிகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
தலைநகர் சென்னையில்,… pic.twitter.com/6RJx7qbXIQ
அதிலும் ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியினரே தாக்குதலில் ஈடுபட்டிருப்பதும், அதனைத் தடுக்க இயலாமல் காவல்துறையினர் கைகட்டி நிற்பதும், தமிழகத்தை வன்முறைப் பாதையில் அழைத்துச் செல்வது தான் திமுக அரசின் திட்டமோ என்ற சந்தேகம் எழுகிறது. தொடர்ந்து எதிர்க்கட்சியைச் சார்ந்தோர் மீதெல்லாம் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், இனியாவது சட்டம் ஒழுங்கை சீர்செய்ய அறிவாலயம் அரசு முன்வர வேண்டும். மேலும், எந்தவொரு அரசியல் சார்புமின்றி, சகோதரர் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்களைத் தாக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்." என்று கூறியிருக்கிறார்.
பாஜக அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், பாமக அன்புமணி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தச் சம்பவத்தில் திமுக, விசிக கட்சியினைக் கண்டித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs