செய்திகள் :

நாளை(செப். 7) சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 11 ரயில்கள் ரத்து!

post image

பொன்னேரி பணிமனையில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை(செப். 7) இரவு சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 11 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை சென்ட்ரல் - கூடூர் இடையே பொன்னேரி பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் சென்னை கடற்கரை/மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை இடையேயான ரயில்கள் செப். 7 ஆம் தேதி இரவு 8 மணி முதல் செப். 8 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

அதேபோல கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்குச் செல்லும் ரயில்களும் மேற்குறிப்பிட்ட நேரத்தில் ரத்து செய்யப்படுகிறது.

அதற்குப் பதிலாக சென்னை கடற்கரை/மூர் மார்க்கெட் முதல் மீஞ்சூர் வரையிலும், மீஞ்சூரில் இருந்து சென்னை கடற்கரைக்கும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

செப். 8 அதிகாலை 4 மணிக்குப் பிறகு வழக்கம்போல ரயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 suburban trains between Chennai and Gummidipoondi will be cancelled tomorrow (Sept. 7) night due to maintenance work at the Ponneri yard.

செங்கோட்டையன் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பும் கொண்டாட்டமும்!

அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு கிளம்பும்நிலையில், மற்றொரு புறம் கொண்டாடியும் வருகின்றனர்.அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக பல்வேற... மேலும் பார்க்க

செங்கோட்டையன் பதவிப் பறிப்பு - சர்வாதிகார உச்சநிலை! ஓபிஎஸ் காட்டம்!

செங்கோட்டையன் பதவிப் பறிப்பு என்பது சர்வாதிகார உச்சநிலை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்கியது தொடர... மேலும் பார்க்க

10 நாள்களுக்கு ரயில்களின் இயக்கம் மாற்றம்! சென்னை மெட்ரோ அறிவிப்பு

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் தெரிவித்துள்ளது. அறிவிப்பில் சென்னை மெட்ரோ கூறுகையில், தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ இரயில் ச... மேலும் பார்க்க

தஞ்சை உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் தஞ்சை உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, செப். ... மேலும் பார்க்க

அதிமுக பொறுப்புப் பறிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை: செங்கோட்டையன்

அதிமுகவின் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டது வேதனையளிக்கவில்லை. மகிழ்ச்சியே என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்திலேயே கருத்து கூறினேன். ... மேலும் பார்க்க

நான் பிரதீப் ஜான் கிடையாது; செங்கோட்டையன் கெடு குறித்து டிடிவி தினகரன் பதில்

நான் பிரதீப் ஜான் கிடையாது, செங்கோட்டையன் முயற்சி வெற்றிபெறுமா எனறு கணித்துச் சொல்வதற்கு என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அமமுக வெளியேறுவதாக டிடி... மேலும் பார்க்க