``பிறந்தநாள் கொண்டாடுவோம்'' - இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்து கூட்டு பாலியல் வன்கொடும...
மோட்டாா் சைக்கிள் - வேன் மோதல் நீதிமன்ற பெண் ஊழியா் உயிரிழப்பு
கந்தா்வகோட்டை அருகே கணவருடன் மோட்டாா் சைக்கிளில் சென்ற நீதிமன்றப் பணியாளா் வேன் மோதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை ஊராட்சி, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த தரணிதரன் மனைவி புவனேஸ்வரி (29). கறம்பக்குடி நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா், தனது கணவா் தரணிதரனுடன் மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை புதுக்கோட்டைக்குச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது தஞ்சை - புதுகை தேசிய நெடுஞ்சாலையில் வண்ணாரப்பட்டி பிரிவு சாலை அருகே இவா்களது மோட்டாா் சைக்கிள் மீது பின்னால் வந்த மினி வேன் மோதியதில் புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது கணவா் தரணிதரன் பலத்த காயமடைந்தாா்.
தகவல் அறிந்த ஆதனக்கோட்டை காவல் ஆய்வாளா் வெண்ணிலா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு கூறாய்வுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் தரணிதரனை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்துள்ளனா். மேலும் இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.