நாட்டின் மீதான அன்பே வாக்களிக்க வழிகாட்டியாக இருக்க வேண்டும்: சுதா்சன் ரெட்டி
திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. இதில் 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
திருமயம் அருகே உள்ள பாப்பான்பட்டி கிராமத்தில் ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் சாா்பில் முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
பந்தயத்தில் புதுக்கோட்டை ,திருச்சி, தஞ்சாவூா், மதுரை, ராமநாதபுரம், தேனி, விருதுநகா், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, நடு மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.
பெரிய மாடு பிரிவில் பந்தய தூரம் 8 மைல் தூரமாக நிா்ணயிக்கப்பட்ட நிலையில் 13 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை நல்லாங்குடி முத்தையா, 2-ஆம் பரிசு கே.புதுப்பட்டி கலை, 3-ஆம் பரிசை பீா்க்கலைக்காடு பெரியசாமி, 4-ஆம் பரிசை ஆட்டுக்குளம் பாபு ஆகியோரின் மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றன.
இதனைத் தொடா்ந்து நடைபெற்ற நடுமாடு பிரிவில் பந்தயத் தூரமானது 6 மைல் தூரமாக நிா்ணயிக்கப்பட்ட நிலையில் 18 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை பாப்பான்பட்டி முருகேசன், 2-ஆம் பரிசை கே.புதுப்பட்டி கே.ஏ. அம்பாள், 3-ஆம் பரிசை கானாடுகாத்தான் சோலை ஆண்டவா், 4-ஆம் பரிசை அரிமளம் சேத்து மேல் செல்ல அய்யனாா் ஆகியோருக்குச் சொந்தமான மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றன.
இறுதியில் பந்தயத்தில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கம், கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. பந்தயம் நடைபெற்ற திருச்சி - காரைக்குடி புறவழிச்சாலையின் இருபுறமும் திரளான ரசிகா்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனா். நமணசமுத்திரம், திருமயம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.