Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
புதுகை, பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்தடை
புதுக்கோட்டை, பொன்னமராவதி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
பராமரிப்புப் பணிகளால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், அன்னச்சத்திரம், மறைமலைநகா், நியூ டைமண்ட் நகா், வள்ளியப்பா நகா், மலையப்பா நகா், பாரி நகா், மாலையீடு, சிவகாமி ஆச்சிநகா், சிவபுரம், தேக்காட்டூா்.
கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லெணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் க. அன்புச்செல்வன் தெரிவித்தாா்.
பொன்னமராவதியில்.. இதேபோல கொன்னையூா், நகரப்பட்டி மற்றும் மேலத்தானியம் துணை மின்நிலையப் பராமரிப்புப்பணியால் கொப்பனாப்பட்டி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி,மைலாப்பூா், தொட்டியம்பட்டி, செம்பூதி, செவலூா், கோவனூா், குழிபிறை, பனையபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, கல்லம்பட்டி, நகரப்பட்டி, கண்டியாநத்தம், காரையூா், மேலத்தானியம், கீழத்தானியம், ஒலியமங்கலம், அரசமலை, நல்லூா் மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். அசோக்குமாா் தெரிவித்தாா்.