பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ கஞ்சா கடத்தல் இளைஞா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் நிலைய ஆய்வாளா் பெரோஸ்கான், உதவி ஆய்வாளா் லட்சுமிபிரியா உள்ளிட்ட போலீஸாா் கீழமாந்தாங்குடி பிரிவு சாலையில் அண்மையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த ஜெகதீசன் மகன் பிரிதிவிராஜ் (26) என்பவரை நிறுத்தி சோதனையிட்டனா். அவரிடம் இருந்த 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவரிடமிருந்து, கைரேகைப் பிரிவு போலீஸ் என்ற போலி அடையாள அட்டை ஒன்றும், ஏா் கன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பிரிதிவிராஜ், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.