செய்திகள் :

விநாயகர் சிலை கரைப்பு: முதல்வர் மனைவியுடன் சேர்ந்து மும்பை கடற்கரையை சுத்தம் செய்த அக்‌ஷய் குமார்

post image

மும்பையில் நேற்று காலையில் இன்று அதிகாலை வரை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. இதனால் மும்பையில் உள்ள கடற்கரையில் அதிகமான குப்பைகள் கிடக்கின்றன. பூஜைபொருட்கள் மற்றும் இதர கழிவுகள் மும்பை கடற்கரை கடற்கரைக் கரைகளில் ஒதுங்கி இருக்கின்றன. இதையடுத்து பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இன்று காலையில் ஜுகு கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். மாநகராட்சி கமிஷனர் புஷன் மற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஜுகு கடற்கரையை சுத்தம் செய்யும் பணிக்காக வந்திருந்தனர்.

அவர்களுடன் சேர்ந்து நடிகர் அக்‌ஷய் குமார், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ் ஆகியோரும் கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர்.

அக்‌ஷய் குமார் கடற்கரையில் கிடந்த பூ போன்ற கழிவுகளை கையால் எடுத்து அதனை தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் எடுத்து வந்த பைகளில் போட்டார். இதில் பேசிய நடிகர் அக்‌ஷய் குமார்,''தூய்மையை பேணுவதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். நாம் தூய்மையைப் பேண வேண்டும் என்பதை ஞானம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

இது நமது பிரதமரால் வலியுறுத்தப்பட்ட ஒரு முக்கிய அம்சமாகும், அவர் தூய்மை என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மாநகராட்சிகளின் பொறுப்பு மட்டுமல்ல, அது பொதுமக்களின் பொறுப்பும் கூட என்று வலியுறுத்தியுள்ளார் என்றார்.

இதில் பேசிய அம்ருதா பட்னாவிஸ்,''தூய்மையைப் பேணுவதற்கும், தூய்மை திட்டத்தைத் தொடங்குவதற்கும் மக்களுக்கு முதலில் செய்தியை வழங்கியது பிரதமர் மோடிதான் என்று நான் நினைக்கிறேன். அதன் விளைவாகத்தான் இன்று இது நடக்கிறது. தூய்மை இயக்கங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையைப் பாருங்கள், பிரதமரின் வழிகாட்டுதலால்தான் இந்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது" என்று அம்ருதா பட்னாவிஸ் கூறினார்.

பிக்பாஸ் 19: போட்டியில் பங்கேற்ற நடிகையின் கதையை கேட்டு கண் கலங்கிய சல்மான் கான்

இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் நடத்தி வருகிறார். தற்போது பிக்பாஸ் 19வது பருவம் நடந்து வருகிறது. இதில் நடிகை குனிக்கா சதானந்த் கலந்து கொண்டுள்ளார்.மற்றொரு போட்டியாளர் பர்ஹானா, நடிகை... மேலும் பார்க்க

கொல்கத்தா: காபி கப்களில் சித்திரங்கள்; வாடிக்கையாளர்களை ஈர்க்கும் தெருவோர வியாபாரி!

கொல்கத்தாவின் டோலிகஞ்ச் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் ஒரு தெருவோர வியாபாரி, ஸ்டார்பக்ஸ் பாணியில் தனித்துவமாக காபி பரிமாறுகிறார். வாடிக்கையாளரின் பெயரை கோப்பையில் எழுதுவதற்கு பதிலாக, அவர்களின் முகத்தை க... மேலும் பார்க்க

ஜப்பான்: பொது இடங்களில் வாசனை திரவியம் பயன்படுத்துவது அவமரியாதையா? - பின்னணி என்ன?

ஜப்பானில் சமூகத்தில் பெரிதாக பேசப்படும் ஒரு தனிப்பட்ட விஷயம் தான் “Smell Harassment” அல்லது “ஸுமேஹாரா”. இது ஒருவரின் உடல் வாசனை, அதிகமாகப் பயன்படுத்தப்படும் பர்ப்யூம், புகையிலை புகை, விலங்குகள் அல்லது... மேலும் பார்க்க

இத்தாலி: மனைவிகளின் நிர்வாணப் படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்த ஆண்கள் குழு; சிக்கியது எப்படி?

ஒரு ரகசிய பேஸ்புக் குழுவை அமைத்து அதில் பெண்களின் ஆபாசப் படங்களை அந்தக் குழுவில் உறுப்பினராக இருப்பவர்கள் பகிர்ந்து வந்துள்ளனர். 2019 முதல் செயல்பட்டு வரும் இந்தக் குழு 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப... மேலும் பார்க்க

”மனைவியின் பேச்சைக் கேட்டும் ஆண்களே வெற்றிபெறுகிறார்கள்” - ஆய்வு கூறும் தகவல்கள் என்ன?

மனைவிகளின் பேச்சைக் கேட்கும் கணவர்கள் அந்தத் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், தங்களின் துறைகளிலும் வெற்றிகரமான நபராக மாறுவதாகவும் சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.திருமணம் என்றால் ... மேலும் பார்க்க

1,100 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது நேருவின் பங்களா - பின்னணி என்ன?

டெல்லியில் இருக்கும் நேருவின் லுட்யன்ஸ் பங்களா 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது. 3.7 ஏக்கர் பரப்பளவில், 24,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களா, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ... மேலும் பார்க்க