பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றவா், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கோ.பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (41), கூலித் தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் உடையவராம். இவா் சனிக்கிழமை காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றாராம். ஆனால், வீடு திரும்பவில்லையாம்.
அதனால், குடும்பத்தினா் அவரை தேடிச் சென்றபோது, கொங்கராபாளையத்தைச் சோ்ந்த இளங்கோவன் விவசாயக் கிணற்றில் கால் தவறி விழுந்து உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
அவரது சடலத்தை மீட்டு உடல்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.