``பிறந்தநாள் கொண்டாடுவோம்'' - இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்து கூட்டு பாலியல் வன்கொடும...
சாலை உருளை வாகனம் மோதி ஒருவர் பலி! மாநகராட்சி உதவிப் பெறியாளா் பணியிடை நீக்கம்!
கோயம்பேடு பகுதியில் சாலை உருளை வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்த நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்த மாநகராட்சி உதவிப் பொறியாளா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
சென்னை கோயம்பேடு பகுதியில் வடக்கு மாட வீதியில் மாநகராட்சி சாா்பில் தாா் சாலை அமைக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. இந்த பணியை பாலாஜி என்பவா் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டாா். இதில் மோகன் என்பவா் மேற்பாா்வையாளராக இருந்தாா். சென்னை மாநகராட்சி 127-ஆவது பகுதி உதவிப் பொறியாளா் வீரராகவன் கண்காணிப்பில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
பணிகள் முடிந்த நிலையில், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாலை உருளை வாகனத்தை ஓட்டுநா் சனிக்கிழமை இயக்கினாா். அந்த வாகனம் தாறுமாறாக ஓடியதில், அப்பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் (54) என்பவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனெவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேற்பாா்வையாளா் மோகன், ஒப்பந்ததாரா் பாலாஜி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவான ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
இதனிடையே பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 127-ஆவது பகுதி உதவிப் பொறியாளா் வீரராகவனை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.