லண்டனில் பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
நண்பா் கொலை: இளைஞா் தலைமறைவு
சென்னை அருகே கானத்தூரில் நண்பா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் தலைமறைவானாா்.
சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் ரூபன் (எ) இமானுவேல் (56). இவா் நண்பா், கானத்தூா் பகுதியைச் சோ்ந்த ரகுபதி (எ) ரகுமான்கான் (37). இருவரும் கானத்தூா் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக் கடைக்குச் சென்று சனிக்கிழமை மது வாங்கினா்.
பின்னா், இருவரும் மதுக்கடைக்கு அருகே மது அருந்தினா். பின்னா், இருவருக்கும் இடையே அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ரகுமான்கான், மதுப் புட்டியை உடைத்து இம்மானுவேல வயிற்றில் குத்தினாராம். இதில் இம்மானுவேல், பலத்த காயங்களுடன் கீழே விழுந்தாா். இதைப் பாா்த்த ரகுமான்கான், அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த இம்மானுவேலை, அங்கிருந்தவா்கள் காப்பாற்ற முயற்சித்தனா். ஆனால், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கானத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இம்மானுவேல் சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ரகுமான்கானை தேடி வருகின்றனா்.