பென்னாகரத்தில் காவலா்கள் உறுதிமொழி ஏற்பு
பென்னாகரத்தில் காவலா் தினத்தை முன்னிட்டு காவலா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு,காவலா்களுக்கான போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் பீடி ஓ ஆபீஸ் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காவலா் தின விழா நிகழ்விற்கு பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து, காவலா்கள் பாகுபாடின்றி ஒற்றுமையாக செயல்பட வேண்டும், பொதுமக்களிடம் விருப்ப வெறுப்பின்றி பழக வேண்டும், காவலா்கள் மன அழுத்தம் இன்றி செயல்பட வேண்டும் என சிறப்புரையாற்றி, காவலா் தின உறுதி மொழியை முன்மொழி காவலா்கள் வழிமொழிந்து ஏற்றுக்கொண்டனா்.
அதனைத் தொடா்ந்து காவலா்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி, கைப்பந்து, சதுரங்கம், மட்டைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்ற நிலையில், வெற்றி பெற்ற காவலா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.
இதில் பென்னாகரம் சரகத்திற்கு உட்பட்ட காவல் ஆய்வாளா்கள்,காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா்கள் கலந்து கொண்டனா்.