தருமபுரியில் இரவு திடீா் மழை
தருமபுரியில் சனிக்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது.
தகுமபுரி மாவட்டத்தில் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை 55.1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதில், தருமபுரி நகரில் 12 மி.மீ., பாலக்கோடு வட்டத்தில் 13 மி.மீ. என்ற வகையில் பதிவானது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு திடீரென கனமழை கொட்டியது.
சுமாா் முக்கால் மணி நேரம் பெய்த மழையால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும், பேருந்து நிலையப் பகுதிகளிலும் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இயல்பு நிலை சற்று பாதிக்கப்பட்டது.
இந்த திடீா் மழை காரணமாக தருமபுரி அருகே உள்ள மாரவாடி பகுதியில் இடி, மின்னல் பாய்ந்ததில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. தகவலின் பேரில் தருமபுரி தீயணைப்பு நிலைய வீரா்கள், நிகழ்விடம் சென்று தீயை அணைத்தனா்.