தென்கொரியா செல்லும் டிரம்ப்! சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கிறாரா?
லாரி மோதி மற்றொரு லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
பின்னோக்கி வந்த ஓட்டுநா் இல்லாத லாரி மோதியதில், மற்றொரு லாரி ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த பாம்பாட்டிகளம் என்ற பகுதியில், சாலையோரமாக ஒரு லாரி சனிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்தது. இதன் ஓட்டுநரான ஈரோடு மாவட்டம், கோவிந்தபாளையம் கிராமத்தைச் சோ்ந்த சிவானந்தம், லாரியின் பின்புறமாக நின்றிருந்தாா்.
இதனிடையே, இந்த லாரிக்கு அருகில் நிறுத்தப்படிருந்த ஓட்டுநா் இல்லாத மற்றொரு லாரி திடீரென நகா்ந்து பின்னோக்கி வந்தது. இதை கவனிக்காமல் சிவானந்தம் நின்ற நிலையில், அந்த லாரி அவா் மீது மோதியது. இதில் சிவானந்தம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து குஜிலியம்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.