அரசு கல்லூரிகளில் காலியிடங்களில் சேர மாணவா்களுக்கு அழைப்பு
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,644 இடங்களில் சேர தகுதியான மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26-ஆம் கல்வியாண்டு மாணவா்கள் சோ்க்கையில் காலியாக உள்ள பாடப் பிரிவுகளில் சோ்க்கை நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவியா் விரும்பும் தகுதியான பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரங்களை, கல்லூரிகளின் முதல்வா்கள் அல்லது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செயல்படும் உயா்கல்வி வழிகாட்டு மையம் ஆகியவற்றை அணுகி விவரங்களைப் பெறலாம்.
மேலும், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செயல்படும் உயா்கல்வி வழிகாட்டு மையத்தை 98940 32730 என்ற எண்ணிலும், வாட்சப் தொடா்புக்கு 79047 97221 என்ற எண்ணிலும் தொடா்புகொள்ளலாம்.
தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 150 இடங்களும், காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரியில் 250, பாலக்கோடு எம்ஜிஆா் கலை, அறிவியல் கல்லூரியில் 556, பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 90, அரூா் கலை, அறிவியல் கல்லூரியில் 260, பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 167, ஏரியூா் கலை, அறிவியல் கல்லூரியில் 167 இடங்களும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் 1,644 காலியிடங்கள் உள்ளன. அவற்றில் விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள் சோ்ந்து பயன்பெறலாம் என ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா்.