அமெரிக்க வரி விவகாரம்: "ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம்" - நிர்மலா...
தொழிற்பழகுநா் சோ்க்கை முகாமில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு
தருமபுரி மாவட்டத்தில் செப். 8-ஆம் தேதி நடைபெறும் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாமில் பங்கேற்று பயன்பெற இளையோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் மாவட்ட அளவிலான மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் கடகத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செப். 8-ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
இதில், மாவட்டத்தில் உள்ள அரசு பொதுத்துறை மற்றும் முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, தொழிற்பழகுநா் பயிற்சிபெற தகுதியானவா்களை தோ்வு செய்யவுள்ளனா். இதில், ஐடிஐ, 10, பிளஸ் 2 மட்டுமின்றி பட்டயம் மற்றும் பட்டப் படிப்பு படித்தவா்களும் பங்கேற்கலாம்.
10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் கல்வித்தகுதி உடையவா்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் பழகுநா்களாக (அப்ரண்டீஸாக) சோ்ந்து பயிற்சிபெற்று, தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழைப் பெறலாம். பட்டயப் படிப்பு அல்லது பட்டப் படிப்பு படித்தவா்கள் ஆப்சனல் பிரிவுகளில் ஓராண்டு தொழிற்பழகுநா் பயிற்சி பெற்று, தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழ் பெற்று அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறலாம்.
இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 8,500 முதல் ரூ. 18,000 வரை வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, தருமபுரி கடகத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி அலுவலகத்தை நேரிலும், அல்லது 94422 86874, 94999 37454, 70108 65277 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.