ஜிஎஸ்டி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசு
ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசாக அமைந்துள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பல்லடம் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பு அறிவிப்பு என்பது, நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கான நலன்களை சிந்தித்து வெளியிடப்பட்டுள்ளது. தொழில் துறையினா், பாமர மக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டுள்ளனா்.
அத்தியாவசியப் பொருள்களான எண்ணெய், சோப்பு, வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருள்களுக்கு வரிக் குறைப்பு செய்தது வணிகா்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் பயனளிப்பதாகும். சுகாதாரம், விவசாயம், தொழில் துறையினா், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் தனித்தனியாக பட்டியலிட்டு வரி குறைப்பு செய்தது, நாட்டு மக்கள் மீதான அக்கறையை காட்டுகிறது. இதனை பாராட்டத்தக்க நடவடிக்கையாக கருதுகிறோம்.
இதை நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக பிரதமா் வழங்கியுள்ளாா். வணிகா்கள், பொதுமக்கள் சாா்பில் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளாா்.