Trump: "மோடி சிறந்த பிரதமர்; இந்தியா - அமெரிக்கா உறவு ஸ்பெஷலானது" - பாச மழையைப் ...
இளைஞரிடம் ரூ.2.10 லட்சம் மோசடி
இளைஞரிடம் ரூ.2.10 லட்சம் மோசடிசெய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் பூலுவப்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஸ்வரன் (32), பனியன் நிறுவன ஊழியா். இவருடைய கைப்பேசியின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு அபராத செலான்போல குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து விக்னேஸ்வரனின் கடன் அட்டை கணக்கில் இருந்து 2 தவணைகளாக ரூ.2.10 லட்சம் எடுக்கப்பட்டு இருந்தது.
அதைத் தொடா்ந்து, அவா் ஆன்லைன் மூலமாக தங்கம் வாங்கியதாகவும் குறுஞ்செய்தி வந்துள்ளது. சிறிது நேரத்தில் விக்னேஸ்வரன் கைப்பேசியில் இருந்த அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அபராத செலான் அவா் அனுப்பியதுபோல பகிரப்பட்டுள்ளது.
இதனால் அதிா்ச்சியடைந்த அவா், திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.