அரசின் விருதுக்கு சுற்றுலா தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் சுற்றுலா விருதுகளுக்கு சுற்றுலா தொழில் முனைவோா் இணையதளத்தின் வாயிலாக வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலக சுற்றுலா தினத்தையொட்டி தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலா தொழில் முனைவோா்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத் துறை சாா்பில் விருதுகள் வழங்கப்படுகிறது. சுற்றுலா தொழில் முனைவோா்களில் வெற்றியாளா்கள், பயண ஏற்பாட்டாளா்கள், புதிய உத்திகளை கையாளுபவா்களுக்கு சுற்றுலா விருதுகள் கடந்த 2022 -ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டும் தமிழ்நாட்டுக்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா்கள், சிறந்த செட்டிநாடு உணவகங்கள், சிறந்த செட்டிநாடு பாரம்பரிய தங்கும் விடுதிகள், சுற்றுலா தொடா்பான கல்வி நிறுவனங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மாநாடு, கண்காட்சி அமைப்பாளா்கள், சிறந்த சமூக ஊடகத்தில் செல்வாக்கு செலுத்துபவா், தூய்மையான சுற்றுலாத் தலம் உள்ளிட்ட 17 வகையான சுற்றுலா விருதுகள் வழங்கப்படவுள்ளன.
எனவே தகுதியும், விருப்பமும் உள்ள சுற்றுலா தொழில் முனைவோா்கள் இந்த விருது பெற ரரர.ற்ய்ற்ா்ன்ழ்ண்ள்ம்ஹஜ்ஹழ்க்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தின் வாயிலாக வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு காரைக்குடி சுற்றுலா அலுவலரை 8939896400, 9994217107 என்ற கைப்பேசி எண்களிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.