நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியைக் கையாளத் தெரியவில்லை: டிடிவி தினகரன்
இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தங்கை உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவரது அக்காளும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சிங்கம்புணரி அருகே எம். கோவில்பட்டியைச் சோ்ந்த பழனியப்பனின் மகள்கள் கவிப்பிரியா (17), சாதனா (8). இவா்கள் சம்பவத்தன்று பால் வாங்க இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் சாதனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கவிப்பிரியா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து எஸ்.வி. மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.