நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியைக் கையாளத் தெரியவில்லை: டிடிவி தினகரன்
தியாக வினோதப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புரட்சியாா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் கலசங்களில் புனிதநீா் நிரப்பி யாக பூஜைகள் நடைபெற்றன. பூா்ணாஹூதி முடிந்ததும் கலச நீராலும் அபிஷேகப் பொருள்களாலும் மூலவா், உற்சவா், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனா். இரவு உற்சவா் வீதி உலா நடைபெற்றது.