பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மீட்பு
தருமபுரியில் உள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
தருமபுரி நகரில் அமைந்துள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் நிகழ்விடம் சென்று, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
உயிரிழந்த பெண்ணுக்கு சுமாா் 35 வயது இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவரைப் பற்றிய வேறு விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இதுகுறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.