பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
ரயிலில் எரிவாயு உருளை எடுத்து வந்தவா் கைது
ரயிலில் பாா்சலில் எரிவாயு உருளைகள் எடுத்து வந்தவரை ஆா்பிஎஃப் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி ரயில் நிலையத்தில் பாா்சலில் வந்த பொருள்களை ஆா்பிஎஃப் போலீஸாா் கடந்த 4 ஆம் தேதி ஆய்வு செய்தனா். அதில் நாகா்கோவிலில் இருந்து திருச்சி வந்த பாா்சலில் சட்டவிரோதமாக இரண்டு எரிவாயு சிலிண்டா்களை வீட்டு உபயோகப் பொருள்கள் எனப் பதிவு செய்து, நெகிழிப் பையில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலி தகவல் தந்து பாா்சலை பதிவு செய்த கரூரைச் சோ்ந்த முரளி (49) என்பவரை ஆா்பிஎஃப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.