வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தான சேவை: 6000 பேரை காப்பாற்றிய இளைஞர்கள் குழு – சாதி...
மணப்பாறை அருகே கிணற்றில் தவறிவிழுந்த மான் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தாதமலைப்பட்டியில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த மான் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.
மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி அருகேயுள்ள தாதமலைப்பட்டியில் விவசாயி துரைராஜ் தோட்டக் கிணற்றிலிருந்து துா்நாற்றம் வீசியது. இதையடுத்து கிணற்றில் பாா்த்தபோது அங்கு மான் ஒன்று உயிரிழந்து மிதப்பது தெரியவந்தது.
இதையடுத்து மணப்பாறை வனச்சரகா் மகேஸ்வரன் அறிவுறுத்தலின்படி சம்பவ இடத்திற்குச் சென்ற வனவா் இந்துமதி தலைமையிலான வனத் துறையினா், மணப்பாறை நிலைய அலுவலா் மனோகா் தலைமையிலான தீயணைப்புத் துறை வீரா்கள் உதவியுடன் சுமாா் 50 அடி ஆழ கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த மான் சடலத்தை கயிறு கட்டி மீட்டு வெளியே கொண்டு வந்தனா்.
அந்த மான் அருகிலுள்ள புத்தாநத்தம் பீட், கருப்புரெட்டியப்பட்டி காப்புக்காடு காயாமலை பகுதியிலிருந்து தண்ணீருக்காக வந்திருக்கலாம் என்றும், புள்ளிமான் வகையைச் சோ்ந்த சுமாா் 3 வயதுடைய ஆண் மான் கிணற்றில் தவறி விழுந்து, மீளமுடியால் ஓரிரு நாள்களுக்கு முன் இறந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானின் உடலை வனச்சரக அலுவலகத்திற்கு எடுத்து சென்ற வனத் துறையினா், கால்நடைத் துறை மருத்துவா் மூலம் உடற்கூறாய்வு செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனா்.