செய்திகள் :

ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொலை!

post image

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா உள்ளிட்ட நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இடங்களில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் சமீப நாள்களில் மிகவும் தீவிரமடைந்துள்ளனா். இதுபோன்ற தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்கும் முனைப்புடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்ட சரண்டா வனப் பகுதியில் மாவோஸ்ட்கள் இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஜார்கண்ட் மாநில காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் கொண்ட கூட்டுக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் சிலா், பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தினா்.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். பாதுகாப்புப் படையினரின் கடுமையான துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதி அமித் ஹன்ஸ்தா கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து அமித் ஹன்ஸ்டா உடல் மற்றும் துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். தொடர்ந்து தப்பியோடியவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது .

கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதியான அமித் ஹன்ஸ்தா, பொகாரோ மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ஹன்ஸ்தா, மேற்கு சிங்பூம், செரைகேலா-கர்சவான் மற்றும் குந்தி மாவட்டங்களின் மண்டலத் தளபதியாக கடந்த பத்தாண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்ததாகவும், அவரது தலைக்கு அரசு தரப்பில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல்கள், சாலை கட்டுமானம் மற்றும் பிற அரசுத் திட்டங்களைத் தடுத்ததற்காக அமித் ஹன்ஸ்தா மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜூலை மாதம் வரை, ஜார்க்கண்ட் முழுவதும் பாதுகாப்புப் படையினருடன் நடந்த 14 துப்பாக்கிச் சண்டைகளில் 21 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி போஸ்டா வனப் பகுதியில் நடந்த மோதலில் நக்சல் தளபதி அருண் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2024-25 இல் அண்டை மாநிலமான சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 400-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் ஜூன் மாதம் தெரிவித்தார்.

2024 இல் சத்தீஸ்கர் முழுவதும் 217 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.

2026 மார்ச் 31-க்குள் மாவோயிசத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிற்சி!

A Maoist commander was killed in a gunfight with security forces in West Singhbhum district of Jharkhand on Sunday morning, the Hindustan Times quoted police as saying.

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடல்

திருப்பதி: சந்திர கிரகணத்தையொட்டி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கதவுகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மூடப்பட்டது. சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31... மேலும் பார்க்க

செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையம்: ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ரயில்வே பொது மேலாளருக்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.இது... மேலும் பார்க்க

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தால் என்ன சாதிக்க விரும்புகிறார் மோடி? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி என்ன சாதிக்க விரும்புகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்த... மேலும் பார்க்க

லிடியன் நாதஸ்வரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

திருக்குறளை உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்துள்ள இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொட... மேலும் பார்க்க

11 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் க... மேலும் பார்க்க

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?: சித்தராமையா கேள்வி

பெங்களூரு: உள்ளாட்சித் தேர்தல்களின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பழைய முறைக்கு திரும்புவதற்கான தனது அரசாங்கத்தின் முடிவை நியாயப்படுத்தும் கா்நாடக முதல்வா் சித்... மேலும் பார்க்க