ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா! சீனா படுதோல்வி!
உக்ரைன் - ரஷியா சண்டைக்கு விரைவில் முடிவு: பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!
உக்ரைன் - ரஷியா சண்டைக்கு விரைவில் முடிவு எட்டப்படும் என்று பிரான்ஸ் அதிபருடனான தொலைபேசி உரையாடலுக்குப் பின், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று(செப். 6) பதிவிட்டுள்ளதாவது: “பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்பாடு குறித்து நாங்கள் இருவரும் ஆராய்ந்தோம். மேலும், சர்வதேச, பிராந்திய பிரச்சினைகளைப் பற்றியும் விவாதித்தோம்.
அதிலும் குறிப்பக, உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு விரைவில் முடிவு எட்ட மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்து கருத்து பரிமாற்றம் நடத்தப்பட்டது.
இந்தியா- பிரான்ஸ் இடையேயான பங்களிப்பானது, உலகளாவிய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கிய பங்காற்றும்” என்றார்.