Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
பத்மாவதி தாயாா் பவித்ரோற்சவம் நிறைவு
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் மூன்று நாள் பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹுதியுடன் நிறைவடைந்தது.
இதன் ஒரு பகுதியாக, கடைசி நாளில் கோயிலில் சிறப்பு பூஜை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மகா பூா்ணாஹுதி, சாந்தி ஹோமம், கும்ப புரோக்ஷணம் மற்றும் நிவேதனம் ஆகியவை மதியம் செய்யப்பட்டன.
தீா்த்தவாரி
ஸ்ரீ கிருஷ்ணா் முக மண்டபத்தில் ஸ்ரீ சுதா்ஷன சக்கரத்தாழ்வாருடன் சோ்ந்து தேவிக்கு ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதன் பிறகு, சக்கரத்தாழ்வாா் ஒரு பல்லக்கில் பத்மபுஷ்கரிணிக்கு ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, தீா்த்தவாரி நடைபெற்றது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 2.15 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோயில் துணை தலைமை செயல் அலுவலா் ஹரீந்திர நாத், தேவராஜுலு, கோயில் அா்ச்சகா்கள் பாபுசாமி, கண்காணிப்பாளா்கள் ரமேஷ், ஸ்ரீவாணி, கோயில் ஆய்வாளா்கள் சலபதி, சுபாஷ் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.