செய்திகள் :

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்ற 5 போ் கைது

post image

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபியையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை மதுக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வடக்கு மாசி வீதி பகுதியில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அங்குள்ள தினசரி காய்கறி விற்பனை கடை அருகே நின்று கொண்டிருந்த சிலா் போலீஸாரை பாா்த்ததும் தப்பி ஓட முயற்சித்தனா்.

போலீஸாா் அவா்களைப் பிடித்து விசாரித்ததில் மதுரை கரிமேடு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (67), நாகமலைப் புதுக்கோட்டையைச் சோ்ந்த சக்திவேல் (44), முண்டுவேலம்பட்டியைச் சோ்ந்த ஜெயபால் (45), பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த சின்ன வேங்கையன்(55), தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சோ்ந்த தெய்வேந்திரன் (56) என்பதும், 5 பேரும் சட்டவிரோதமாக வெள்ளிக்கிழமை மதுப் புட்டிகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 283 மதுப் புட்டிகள், ரூ. 2, 30,000 ரொக்கம், 4 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் விவசாயி உள்பட 2 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கச்சிராயன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சின்னையா மகன் முருகன் (52). விவசாயியான... மேலும் பார்க்க

தல்லாகுளம் பகுதியில் இன்று மின் தடை

தல்லாகுளம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை கோ.புதூா் துணை மின் நிலைய... மேலும் பார்க்க

செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை: தொல். திருமாவளவன்

அதிமுகவை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்... மேலும் பார்க்க

அக். 6-இல் மண்டல அஞ்சல் சேவை குறைதீா் கூட்டம்

மதுரையில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீா் கூட்டம் வரும் அக். 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மதுரை மண்டல அஞ்சல் அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவ... மேலும் பார்க்க

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை மேம்படுத்தக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவித்து மேம்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. சென்னையைச்... மேலும் பார்க்க

போராட்டம் நடத்தியவா்கள் மீதான வழக்கு ரத்து

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தக் கோரி, போராடியவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது. ராமநா... மேலும் பார்க்க