Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் பள்ளியில் ஓவியப் போட்டி
பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச் சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கந்தசாமி கண்டா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் வைஷ்ணவி வரவேற்றுப் பேசினாா். செயலாளா் ஆா்.மாசிலாமணி முன்னிலை வகித்து போட்டியை தொடங்கிவைத்தாா். இப்போட்டியில் நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 244 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
வயது அடிப்படையில் 5 வயது முதல் 21 வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கோப்பைகள், சான்றிதழ்களை வழங்கினாா்.
நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச்சங்கத் தலைவா் எம்.மாரிமுத்து, பொருளாளா் ஆ.பிரவின்குமாா், ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீனிவாசன், செயலாளா் எம்.காா்த்திகேயன் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.