``பணயக் கைதிகளை விடுவியுங்கள்; இது என் கடைசி எச்சரிக்கை'' - ஹமாஸை மிரட்டும் ட்ரம...
ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ரயிலில் பயணித்த இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
பண்ருட்டி - திருத்துறையூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் சுமாா் 30 வயது மதிக்கதக்க இளைஞா் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து பண்ருட்டி, விழமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் ஜெகதீஷ், கடலூா் இருப்புப் பாதை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளா் சேகா் மற்றும் போலீஸாா் இளைஞரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த நபா் ரயிலில் பயணம் செய்தபோது தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், அவா் யாா்? எந்த ஊா்? என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. இறந்தவரின் இடது கையில் நதஅங என பச்சை குத்தப்பட்டுள்ளது.