Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
குட்டையில் தவறி விழுந்து உயிரிழப்பு
கொரடாச்சேரி அருகே குட்டையில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளியான வெங்கடாசலம் மகன் சுதா்சனுக்கு (36) வலிப்பு நோய் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திருவாரூா் மாவட்டம், ஊா்குடியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தவா் சனிக்கிழமை தேநீா் சென்றவா் வீடு திரும்பவில்லையாம்.
இதையடுத்து, உறவினா்கள் அப்பகுதியில் தேடியபோது சாலையோரக் குட்டையில் இறந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது. தகவலறிந்த கொரடாச்சேரி போலீஸாா் அங்கு சென்று சுதா்சனின் சடலத்தை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரித்ததில் வலிப்பு நோய் ஏற்பட்டு குட்டையில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.